எங்களைப் பற்றி


'வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்' என்ற ஒளவையாரின் வாக்கின் வழியில், கற்றதைத் திரும்பத் திரும்ப நினைத்தால் மனதில் ஆழப் பதிந்துவிடும் என்னும் நோக்கில், தமிழரின் மாபெரும் செல்வமான, சங்கப் பாடல்களை ஓதி உணரவும், பிறர்க்கு உரைக்கவும், எளிய முறையில், படிப்படியாக அவற்றைக் கற்றுத் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது இந்த இலக்கியக் கல்வி மன்றம்.

இந்தத் தளம் முனைவர் திருமதி. பாரதி (University of California, Berkeley, California), முனைவர் திருமதி. சித்ரா, திருமதி. வைதேகி, திரு. சங்கர், திருமதி. மலர்விழி ஆகியவர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்டது. எங்களுடன் இணைந்து கட்டுரையைச் சரிபார்த்த திரு. பரத் அவர்களுக்கு எங்கள் நன்றி.

இது ஒரு இலவசத் தளம்.

சங்க இலக்கியக் கல்வி

பதினான்கு நிலைகளின் கையேடுகளைப் பதிவு செய்யாமலே பதிவிறக்கம் செய்யலாம்.

சங்க இலக்கியச் சான்றிதழ் பெற விரும்புவோர் எங்களிடம் பதிவு செய்யவேண்டும். முல்லை என்பது முதல் நிலை. இவ்வாறு மலர்களின் பெயர்களையுடைய பல நிலைகளைச் சில மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடுவோம். இவ்வாறு நீங்கள் பல மலர்களின் பெயர்களைக் கொண்ட பல நிலைகளைக் கற்றால், மேலே குறித்துள்ள பேரறிஞர்களின் உரை நூல்கள் மூலம் நீங்கள் மேற்கொண்டு சங்கப் பாடல்களைக் கற்கலாம். இந்தப் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள 'பாடல் நிலைகளின் கையேடுகள்' என்ற பகுதிக்குச் சென்றால் அங்குப் பாடங்கள் உள்ளன. பதிவு செய்ய விரும்புவோர் மேலே புகுபதிவு-ஐச் சொடுக்கவும்.

சங்க இலக்கியத்தை மேற்கொண்டு படிக்க விரும்புவோர் Learn Sangam Tamil என்ற வலைத்தளத்தில் சென்று படிக்கலாம். அவ்வலைத்தளத்தில் சங்க இலக்கியத் தமிழ் மொழியாக்கமும், ஆங்கில மொழியாக்கமும் உள்ளன. சங்க இலக்கியத்தைப் படித்துப் பயன் பெறுங்கள்.

பாடல் நிலைகளின் கையேடுகள்
முல்லைப்பாட்டு - ஒலி வடிவம்

முனைவர். இரா. அபிராமசுந்தரி, இணைப் பேராசிரியர், இராணி மேரி கல்லூரி, சென்னை

சங்க இலக்கிய உரை நூல்கள்

கீழ்க்கண்ட அட்டவணையில் சங்க இலக்கியப் புத்தகங்கள் கிடைக்குமிடமும் உரையாசிரியர்களின் பெயர்களும் உள்ளன.புத்தகம் உரையாசிரியர் கிடைக்குமிடம்
ஐங்குறுநூறு
பத்துப்பாட்டு
பரிபாடல்
குறுந்தொகை
அகநானூறு
பொ.வே.சோமசுந்தரனார் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 522 டி டி கே சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 600008, Phone - 65146363
நற்றிணை-(4 Volume)
புறநானூறு-(2 Volume)
பதிற்றுப்பத்து-(1 Volume)
ஐங்குறுநூறு- (2 Volume)
ஔவை துரைசாமி சென்னை, நூல்கள் தமிழ் மண் பதிப்பகம், 2 சிங்காரவேலர் தெரு, தியாகராயர் தெரு, தியாகராயர் நகர், தொலைபேசி எண் - 24339030
நற்றிணை H.வேங்கட்ராமன் உ.வே.சா.நூல் நிலையம், 2 அருண்டேல் கடற்கரைச் சாலை, பெசன்ட் நகர், சென்னை
குறுந்தொகை உ.வே.சாமிநாத ஐயர் உ.வே.சா.நூல் நிலையம், 2 அருண்டேல் கடற்கரைச் சாலை, பெசன்ட் நகர், சென்னை
அகநானூறு-(3 Volume) வேங்கடசாமி நாட்டார் சென்னை, நூல்கள் தமிழ் மண் பதிப்பகம், 2 சிங்காரவேலர் தெரு, தியாகராயர் தெரு, தியாகராயர் நகர், தொலைபேசி எண் - 24339030
கலித்தொகை நச்சினார்க்கினியர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 522 டி டி கே சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 600008, Phone - 65146363
நற்றிணை பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 522 டி டி கே சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 600008, Phone - 65146363
சங்க இலக்கியம் எட்டுத்தொகை-(3 Volume) ச.வே.சுப்பிரமணியன் மணிவாசகர் பதிப்பகம், சென்னை
கலித்தொகை டாக்டர் மா.இராசமாணிக்கனார் பூம்புகார் பதிப்பகம், சென்னை
எட்டுத்தொகை நூல்கள் புலியூர் கேசிகன் உரை நூல்கள் பல புத்தகக் கடைகளில் கிடைப்பன

தொடர்பு கொள்ள

Contact Email - kavini100@gmail.com

Flag Counter

Tag Words:  Sangam literature, Sanga Ilakkiyam, Learn Sangam poems, classical language, Akam, Puram, Tamil kings, Tamil poets, Kapilar, Paranar, Avvaiyar, Love poems, ancient poems, சங்க இலக்கியம், செம்மொழி, அக இலக்கியம், புற இலக்கியம், தமிழ் மன்னர்கள், காதல் கவிதைகள், எளிய உரை, பாணர், புலவர், கபிலர், பரணர், ஔவையார், அவ்வையார், புறநானூறு, குறுந்தொகை, அகநானூறு, நற்றிணை, கலித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம், திருமுருகாற்றுப்படை.